2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்

J.A. George   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

முன்னதாக, இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என திட்டமிடப்பட்டிருந்து.

எனினும், பின்னர் ஏற்பட்ட சர்ச்சை நிலையை அடுத்து, கப்பலின் வரவில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் குறித்த கப்பல் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X