Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
ரச நிறுவனங்கள் தொடர்பான, அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) விசாரணை அறிக்கையை, சபைக்கு நேற்று (08) சமர்ப்பித்த அக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி எம்.பி, இந்த நிறுவனங்களினால் நாட்டுக்கு சுமார் 110 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட 15 நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கோப் குழு அறிக்கையே, நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.
தமது தலைமையிலான கோப் குழுவினால் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது அறிக்கை இதுவென்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் (ச.தொ.ச), வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம், சபை, இலங்கை மின்சார சபைக்குரிய நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தபானம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள 4 மகநெகும நிறுவனங்கள், துறைமுகங்கள் அதிகாரசபை, குருநாகல் பெருந்தோட்டக் கம்பெனி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய 15 நிறுவனங்கள் தொடர்பான விசாரணை விவரங்களே இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.
கோப் குழுவின் இந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றிய சுனில் ஹந்துநெத்தி எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“இந்த 15 நிறுவனங்களினாலும் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்களிப்பு மற்றும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாம் ஆராய்ந்துள்ளோம். கடந்த காலங்களில் நட்டம் என்பதை விடவும் வீண் விரயமிக்க, பொருளாதாரத்துக் கேடான பல்வேறு திட்டங்கள் இந்த நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக சூரியவெவ மைதானத்துக்கு தற்போது உரிமையாளர் ஒருவர் இல்லாத நிலைமையொன்றே இருக்கிறது. 5.3 பில்லியன் ரூபாய் துறைமுகங்கள் அதிகாரசபையினால் செலுத்தப்படுகிறதா அல்லது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செலுத்துகிறதா என்ற பேச்சுக்களும் இருக்கின்றன. இதில் 5.3 பில்லியன் ரூபாய் நட்டம் இருக்கிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அந்த அதிகாரசபைக்கு சம்பந்தமில்லாதவையாக மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களினால் 57 ஆயிரம் மில்லியன் வரையான பொருளாதார கேடான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மில்லியன் கணக்கான டொலர்களும் யூரோக்களும் கிடைத்துள்ளன. எனினும், அந்த நிதிகள் பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்துள்ளோம்.
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் 2,918 மில்லியன் ரூபாய், அதேபோல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நட்டம் 37 ஆயிரம் ரூபாய் என்று இந்த அறிக்கையில் இருக்கிறது. இதேவேளை, விடயதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இருக்கின்றன. இந்த அறிக்கையை விவாதத்துக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago