2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

2017 ​ஆம் ஆண்டு புனித ஜோசப் வாஸ் வருடம்

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டை, “புனித ஜோசப் வாஸ் அடிகளார்” இன் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை, கொழும்புப் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்ததுடன்,

“வழிபாடுகளை நிலைப்படுத்துவதற்கு வாஸ் ​அடிகளார் வழியில் செயற்படுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ், இவ்வருடத்துக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும், தெரிவித்தார்.  கொழும்புப் பேராயர் இல்லததில், செவ்வாயன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஆண்டகை மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வருடத்தை, உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வுகள், எதிர்வரும் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அனைத்துப் ஆயர் இல்லங்களிலும், தேவாலயங்களில் இடம்பெறும்” என்றும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .