2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘ஆலோசனை கூறலாம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் சேவையை மேம்படுத்துவதற்காக, யதார்த்தத்துக்குப் பொருத்தமாக, பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகையில், அது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மக்கள் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

15 கேள்விகளைக் கொண்ட விண்ணப்பத்தின் ஊடாக, அதற்கான கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படும். அதன் பின்னர், யதார்த்தத்துக்கு ஏற்றவகையில், பொலிஸ் சீருடை தயாரிக்கப்படும். 1866ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொலிஸ் சீருடை, 1925, 1957 ஆம் ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டது. இறுதியாக 1975ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X