2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'இலங்கை - சீனா உறவை இந்தியா தவறான கண்​கொண்டு பார்த்தது'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது, சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த உறவை, இந்தியா தவறான கண்கொண்டே நோக்கியது என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தியாவில் வெளியாகும் தி இந்து பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம், சீனாவுடன் பேணி வரும் தொடர்புகள் குறித்து மாத்திரம், இந்தியா அமைதி காத்து வருகின்றதெனவும், இதன்போது நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“தன்னுடைய தந்தையான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது, இலங்கைக்குரிய நிலத்தையும் நீரையும், வேறொரு  நாடு பயன்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்ற கொள்கை, கடைபிடிக்கப்பட்டிருந்தது.

ஹம்பாந்தோட்டைத் துறை​முகத்தை நிர்மாணிக்குமாறு, இந்தியாவுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தியாவின் ஒப்பந்தத்தில், இலங்கைக்கு அந்தத் துறைமுகத்தை மீளக் கையளிக்கும் நோக்கம் இருக்கவில்லை. இருப்பினும், சீனா முன்வந்து, மக்களுக்காக, காலத்தைக் கடத்தாது, வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது” என்றும், நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தன்னுடைய தந்தையின் ஆட்சிக் காலத்தின் போது, இந்தியாவோ சீனாவோ அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவோ, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X