2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'ஈழ'த்தைக் கைவிடுகிறது ஈ.பி.ஆர்.எல்.எப்

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பழமைவாய்ந்த கட்சிகளின் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பெயரில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் பெயரில் உள்ள ஈழம் மற்றும் புரட்சி என்ற இரு சொற்களையும் நீக்கிவிட அக்கட்சி தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, 'தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி' என்ற பெயரில் அக்கட்சியின் பெயர் மாற்றம் பெறவுள்ளதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, இரண்டு பிரிவுகளாக இயங்குகின்றது. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தமிழ்ச் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சிஅமைக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் பெயர் மாற்றம் இடம்பெறாது எனவும் பத்மநாபா பிரிவினரே இவ்வாறு பெயர் மாற்றத்தை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படடுகின்றது.

இது குறித்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சுகு என்ற சிறிதரன், ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற நீளமான பெயரை சுருக்குவதற்கான கலந்துரையாடல் தொடர்வதாகவும், பரந்துபட்ட சமூக ஜனநாயகக் கட்சி ஒன்றின் அவசியம் கருதி தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .