2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாங்களே எதிரிகள்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினரே உண்மையாக, ஐக்கிய தேசியக் கட்சியின் எதிரிகள்' என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்கொண்டு கருத்துத் தெரிவித்தவர், 'உதயகம்மன்பில, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பண்டார நாயக்காவின் கொள்கையே கட்சியை பிளவுப்படுத்துவதென்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து உண்மையில், 65ஆவது கட்சி நிறைவுக் கொண்டாடும் எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. அதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினரும் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கின்றனர். உண்மையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அமைப்பாளர்கள் பலரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யாதிருப்பது,  அவர்களுடைய இரட்டை மனநிலையை வெளிப்படுத்துகின்றது.

'உண்மையில், பண்டார நாயக்காவின் கொள்கைக்கிணங்க உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் அங்கத்தவருக்கே இன்று கட்சியின் தலைவர் அந்தஸ்துக் கிடைத்துள்ளது. அன்றிருந்த கட்சியின் அமைப்பாளர்களும் இதற்குக் காரணகர்த்தாக்களாக உள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு தான் தெரிவு செய்யப்படுவேன் என்று கனவிலும் நினைக்காதவரே மைத்திரிபால சிறிசேன. அவர், கட்சியின் தலைமைத்துவத்தை யாரிடமிருந்தும் பறித்தெடுக்கவில்லை. கட்சியின் அங்கத்தவர்களே அதனை அவருக்கு வழங்கி வைத்தனர். இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இருக்கும் அமைப்பாளர்களும் அன்று கட்சியில் இருந்தனர். அப்போதெல்லாம் எதிர்க்காதவர்கள் இன்று எதிர்ப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.

கட்சியை பிளவுபடுத்துவதில்; மஹிந்தவும் வல்லவர். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை அவரே பிளவுபடுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுத்தப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இலாபம் அதேபோன்று எமது கட்சி பிளவுபடுத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே இலாபம்' எனத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .