Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
ஆட்சியை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒப்படைக்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என்று தெரிவித்த மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனியான அரசாங்கமொன்றை 2020ஆம் ஆண்டில் உருவாக்கவே எதிர்பார்த்துள்ளது என்றும் கூறினார்.
ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தலையிடவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேல் மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூறுவது போல், ஐக்கிய தேசியக் கட்சியின் சிபாரிசின் பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அதேபோல், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித ஒப்பந்தமும் இல்லை. ஆனால், கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கத்தடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் ஒப்பந்தம் செய்ய முற்பட்டனர். இவ்வாறானவர்களே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதுபோல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தாது பாதுகாப்பதாகக் கூறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் 7 பேர், பிரதமருடன் புதிய ஆட்சியை அமைப்பதற்கு பேச்சுவார்தை நடத்தினர்.
புதிய ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் ஆட்சியில் மாற்றத்தை கொண்டுவருவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாத்திரமே முடியும். இதில், பிரதமர் தலையிடமுடியாது. அவரால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவே முடியாது' என்றார்.
நல்லாட்சியில் இருந்துகொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பகுதியை தம்வசப்படுத்த பிரதமரால் முடியாது. அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பகுதியை நாம் துண்டாடுவோம்.
எந்தவொரு காரணத்துக்காகவும் 2020ஆம் ஆண்டில் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைக்கப்போவதில்லை.
இதில் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதியாக உள்ளார்.
மக்கள் ஆணைக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னெடுத்துச் சென்றாலும், அக்கட்சி அடுத்து ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி விரும்பவில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago