2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘ஓ.எம்.பி’ சட்டத்தில் திருத்தம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் The Office on Missing Persons (OMP) தொடர்பான சட்டத்தில் திருத்தமொன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (08) நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக, தனி நபரொருவருடனோ அல்லது ஓர் அமைப்புடனே, ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிகாரத்தை அகற்றுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், அச்சட்டமூலத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டவரைபுக்கான ஆலோசனையை சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிராம் கிடைத்துள்ளது. 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) நாடாளுமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியன்று சட்டமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X