Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப. பிறின்சியா டிக்சி
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்ற தினத்தன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்குச் செல்லவேண்டியிருந்தது. அன்றையதினம், தேசத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருந்ததே தவிர, கட்சிக் கூட்டத்துக்கு அல்ல” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
“சட்ட ரீதியான சில பிரச்சினைகள் காரணமாக, தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் கூறித்துக் கூறுவது, சிறிது கடினமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்வதாக ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த உயர்பீடக் கூட்டத்துக்குத் தான் சமுகமளிக்காமை பற்றி அவர் கூறியபோது, “அன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அது சுதந்திர தின நிகழ்வு ஆகையால், தேசத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருந்ததே தவிர, கட்சிக் கூட்டத்துக்கு அல்ல. எனவே, இது குறித்து நான் ஏற்கெனவே கடிதம் மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்தேன்.
மட்டக்களப்பு நிகழ்வில், இலங்கையின் சுதந்திரத்துக்கு சிறுபான்மை மக்கள் செய்த பங்களிப்புத் தொடர்பாக எனக்கு ஓர் உரை வழங்கப்பட்டிருந்தது.
உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் வருவதற்கு முன்னரே, நான் குறித்த சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்துவதாக வாக்குக் கொடுத்திருந்தேன்” என்றார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago