2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘கோட்டாவின் தேசப்பற்று அம்பலமாகும்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மிக் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளை நிறைவடைந்ததன் பின்னர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேசப்பற்று என்னவென்பதை மக்கள் புரிந்துகொள்வர்” என்று, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி, உடுகம மகா வித்தியாலயத்தில், நேற்று இடம்பெற்ற “சுவசர சுவ உதாண” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான விவரங்கள் எதிர்காலத்தில் அம்பலமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“தற்போதைய நல்லாட்சியின் கீழ், அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சேவைகள் பலவற்றின் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது” என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X