2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

11 கோடி ரூபாய் பணத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

George   / 2017 ஜனவரி 30 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 1,112 இலட்சம் ரூபாய் (11.12 கோடி ரூபாய்) கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர், இந்தப் பணத்துடன் டுபாய் நோக்கி பயணிக்க முயன்ற நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .