2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'சன்னங்களுடன் 410 பேர் வாழ்கின்றனர்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யுத்தம் காரணமாக துப்பாக்கி, மோட்டார், குண்டுகள் மற்றும் துப்பாக்கி சன்னங்கள் ஆகியவற்றை உடலில் தாங்கியவாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் 410 பேர் வாழ்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்,

'தற்போது இனங்காணப்பட்டுள்ளவர்களில் 113 பேர் பாடசாலை மாணவர்கள் ஆவர், இந்த நிலையில் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர்பில் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை' என்றார்.

'உடலுக்குள் இவ்வாறான துப்பாக்கி சன்னங்களுடன் உள்ளவர்கள் நோய்களுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு உடனடியாக அரசாங்கம் தலையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் அரச வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் இல்லாததால் துப்பாக்கி, மற்றும் குண்டுகளின் சன்னங்களை அகற்றும் அறுவைச் சிகிச்சையை தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள இலட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்த வேண்டி நிலையுள்ளது. எனினும் அந்தளவு பெருந்தொகைகை செலுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்' என அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது, இராணுவம - புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது நடுவில் மாட்டிக்கொண்ட தாம் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக துப்பாக்கி சன்னங்களை உடலில் தாங்கி வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட தமக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .