2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘சவால்களை தாண்டியே நிலைபெற்றோம்’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

“நல்லாட்சி அரசாங்கம், கடந்த இரண்டு வருடங்களைக் கடப்பதற்கு, கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்தது” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“இன்று எமது சிறப்பு விருந்தினராக, ஆந்திர மாநில முதலமைச்சர் வருகை தந்துள்ளார். நீங்கள் அனைவரும் எண்ணுவது போன்று, ஆந்திர மாநிலத்துக்கும் இலங்கைக்குமான உறவு, தற்போது தோன்றியது அல்ல. அது பல காலங்களாக இருந்து வருகிறது.  

மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ஏற்பட்ட அந்த மாற்றத்தின் பலன்களை, மக்கள் அனுபவித்து வருகின்றனர். இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நல்லாட்சி அரசாங்கம், கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. அந்த ஆண்டுகளை கடந்தது, அவ்வளவு எளிதான காரியமல்ல.  

இந்த நாடு, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பயங்கரவாதம், யுத்தம் போன்றவற்றுக்கு இலங்கையைச் சூழ்கொண்டிருந்தது. நாட்டிலுள்ள மக்களுக்கிடையில், சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதம் ஏற்பட்டிருந்தது. மதவாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஊடுருவி இருந்தது. கடந்த பல வருடங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, நாட்டிலுள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அந்தவகையில், கடந்த 58, 60 வருடங்களாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட  

 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தன்போது ஒன்றிணைந்துள்ளன.  

ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், சிதறிக்கிடந்த உறவுகளை ஒன்றிணைத்து, ஒரே இனம், ஒரே தேசம் என்று எண்ணக்கருவுக்குள் கொண்டு வந்தோம். நான் இலங்கையர் என்ற ஒரு சொல் பதத்தை, தனிநபரொருவருக்கு வழங்கினோம்” என்று அவர் இதன்போது கூறினார்.  

“தற்போது, நாட்டிலுள்ள மக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா?. ஜனாதிபதி பற்றி குறை கூற முடிகிறது, அவரை ஏச முடிகிறது, அரசாங்கத்துக்கு எதிராக பதாதை ஒட்டமுடிகிறது, குறைகளை சுட்டிக்காட்ட முடிகிறது, கார்ட்டூன் வரைகின்றனர், நல்லாட்சி அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், கண்டபடி கதை கூறுகின்றனர். தான் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடிகின்றது. ஊடகங்களும் சுதந்திரமாக செயற்படுகின்றன. ஊடகவியலாளர்கள் கேட்க விரும்புவதை கேட்கின்றனர். வெளிப்படுத்த விரும்புவதை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு முன்னர் அவர்கள் அவ்வாறு இருந்ததில்லை. இவை அனைத்தும் சுதந்திரம் என்ற பதத்துக்குள்ளேயே அடங்கும். நாட்டுக்குள் சுதந்திரம் வேண்டும் என்றே, எமது அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். அதன் பிரதிபலனை மக்கள் அனுபவிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .