Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்கள் யாவரையும் பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாவிடின், நாட்டில் சைட்டம் போன்ற தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ அரசாங்கம் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
சைட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை ஒத்திவைத்த ஒரேயொரு நபர் தான் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கம் விதிக்கும் தரத்தைப் பேண தனியார் பல்கலைக்கலைக்கழகங்கள் சம்மதிக்குமானால், அதற்கு காணி வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
குளியாப்பிட்டிய மற்றும் சப்ரகமுவ பகுதிகளில்; இரண்டு மருத்துவப் பல்கலைக்கழங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சப்ரகமுவவில் பல்கலைக்கழக நிர்மாண வேலைக்கு 2 பில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
சர்வதேச தரத்தின்படி குறிப்பிட்டளவு சனத்தொகைக்கேற்ப குறிப்பிட்டளவு வைத்தியர்கள் இருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக எங்களால் அந்த இலக்கை இன்னும் அடைய முடியவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago