Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜப்பான் நாட்டு பெண்ணொருவரின் மார்பகங்களை தடவிய ஹொட்டல் பணியாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதுடைய குறித்த பெண்ணால், காலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியிலுள்ள உல்லாச விடுதியொன்றின் குளியளறை வெளிப்புறத்தில் இருப்பதனால், அங்கு தங்கியிருந்த ஜப்பான் பெண், குளியளறைக்குச் சென்றுள்ளார். எனினும், தனது அறைக் கதவின் சாவியை, கதவின் உள்புறத்திலேயே வைத்துவிட்டு கதவை மூடியுள்ளார். குளித்து விட்டு வந்து பார்த்த போது, தனது கதவு மூடியிருப்பதைக் கண்டுள்ளார்.
கதவின் சாவியை அறைக்குள் வைத்துவிட்டதாகவும் கதவை திறப்பதற்காக சாவியை எடுத்துத்தருமாறு அங்கிருந்த ஹொட்டல் பணியாளர் ஒருவரிடம் அந்தப் பெண் உதவி கோரியுள்ளார். இதன்போது, ஜன்னால் வழியாக கம்பியொன்றைச் செலுத்தி சாவியை எடுத்துக்கொடுத்தப் பணியாளருக்கு, ஜப்பான் பெண் 'நன்றி' என்று கூறியுள்ளார்.
இதன்போது, 'நன்றி மாத்திரம் போதாது' என்று கூறிவிட்டு, அந்தப்பெண்ணின் மார்பகங்களை, ஹொட்டல் பணியாளர் தடவிப்பார்த்துள்ளார்.
இது குறித்து, காலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்ததையடுத்து, ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
20 minute ago
27 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
32 minute ago
37 minute ago