2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘நல்லாட்சியிலும் கள்வர்கள்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்திலும், மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் சிலர் உள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அத்தனகல பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில் கூறியதாவது,

“கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னதாக, நல்லாட்சி அரசாங்கத்தில் மோசடிகள் எவையும் இடம்பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து வருகிறது. எனினும், இந்த அரசாங்கத்திலும் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் சிலர் உள்ளனர். எனவே, அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்தும், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X