Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
'மஹிந்த ராஜபக்ஷவிடம் நோபல் பரிசுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை நான் கொண்டு வந்து கொடுத்தேன்' அதன்போது, 'உங்களுக்கு எப்படி கிடைத்தது என மஹிந்த கேட்டார்' என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷ,
ஹம்பாந்தோட்டையில் அபிவிருத்தித் திட்டங்களைமுன்னெடுப்பதாகக் கூறி, துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைத்த போது, முதலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமையுங்கள் என்றேன்' அவர் அதனை ஏற்றுக்கொண்டாலும் செய்யவில்லை.
வருமானம் இல்லாது வெறுமனே திட்டங்களை மற்றும் செயற்படுத்திவிட்டார். இப்போது அந்தத் திட்டங்களை நாம் கைவிட முடியாது. அதனால் அந்தத் திட்டங்களைப் பூரணப்படுத்தி வருமானம் வரும் வகையில் பயன்படுத்தவுள்ளோம்.
அதன் ஊடாக முன்னாள் அரசாங்கம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியும். சீனாவின் உதவியுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைக்கவுள்ளோம். இன்றும் 1 வருடத்தில் அதிலிருந்து நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.
இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றிடம் கடந்த ஆட்சியில் கடன் பெற்றுக்கொண்டனர். அதனைச் செலுத்த வேண்டும். 1,300 பில்லியன் ரூபாய் கடன் சுமை உள்ளது.
வாங்கிய கடனைச் சொன்ன நேரத்தில் திருப்பிக் கொடுக்கும் நாடு என்ற நற்பெயர் நமக்கு உண்டு அதனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும்.
ஹம்பாந்தோட்டையில் விமான நிலையம் அமைக்கும் போது, பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்குமாறு கூறினேன். மஹிந்த அதனை கேட்கவில்லை. வருமானம் கிடைக்கும் திட்டத்தையல்லவா முதலில் நிறைவேற்றியிருக்க வேண்டும். நான் சொன்னதை மஹிந்த ஏற்றுக்கொண்டாரேயொழிய செயற்படுத்தவில்லை' என்றார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago