Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக குற்றங்களை குறைக்கும் வகையில், அவர்களது பாதுகாப்புக்காக அலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
முதலில் அன்ரோய்ட் (Android) திறன்பேசிகளில் அறிமுகமாகும் இந்த செயலி ( App) ஊடாக, தாம் இருக்கும் பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்டவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும்.
தற்போது, ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த செயலி, விரைவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி தில்ருக்ஷி டி.சில்வா தெரிவித்ததார்.
இந்த செயலியின் பெயர், விவரம் தொடர்பில், இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025