2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

16 பேரில் ஒருவர் அரச ஊழியர்

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்துக்குள், பட்டதாரிகள் 10ஆயிரம் பேருக்கு அரச தொழில்வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இந்நாட்டில் 16 பேருக்கு ஒருவர், அரச ஊழியராக இருக்கிறார் என, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.  

இந்த நிலைமையை வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உயர்மதிப்பாகும். அதனூடாக பொருளாதாரம், சீரற்ற மைற்கல்லுக்கு வந்துள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.  

வரிப்பணத்தால் உருவாக்கப்படும் பட்டதாரிகளை, அரச தொழில்வாய்ப்புக்காக மட்டுமே, உள்ளீர்த்துகொள்ளுமாறு குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் சங்கங்கள் முயல்கின்றன.

ஆகையினால், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும்  இதனூடாக எதிர்காலத்தில் நாட்டுக்குள் உருவாகும் பொருளாதார முதலீடுகளின் ஊடாக, உருவாக்கப்படும் தொழில்வாய்ப்புகளுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .