2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘மஹிந்தவின் பிரஜாவுரிமையைப் பறிக்க ஜனாதிபதி சம்மதியார்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் செயற்பாட்டுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார்” என, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். 

நீர்ப்பாசன திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள சிலர், குழுக்களாகப் பிரிந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  

“அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு நிறம், ஒரு சின்னம் மாத்திரமே உள்ளது.  

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இக்கட்சியை வழிநடத்திச் சென்ற தலைவர்கள், கட்சிக்கு எவ்வித அவதூறும் ஏற்படாத வகையில் கொண்டு சென்றுள்ளனர். எனவே, கட்சியை இழிவுபடுத்தும் வகையில் செயற்படாமல், பிரிந்து சென்ற அனைவரும் எம்முடன் கைகோர்த்து செயற்பட வாருங்கள். அதற்கான கதவு என்றும் உங்களுக்காக திறந்திருக்கும்” எனக் கூறினார். 

மேலும், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை பிறிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடுமானால், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்​கு எடுத்துக்கொள்ளப்படும். அதன்போது, அதற்கு எதிராகவே நான் வாக்களிப்பேன்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X