2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

​‘ரவி, லக்ஷ்மன், சாகலவை நீக்க முடியாது’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை பதவி நீக்கம் செய்ய என்னால் இணக்கம் தெரிவிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும், “எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பிரச்சினை ஏற்பட்ட போது இவர்களே தனக்கு பக்கபலமாக இருந்தனர். இதனால் அவர்களை நீக்க இணங்க முடியாது.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய நிதி, சட்டம், ஒழுங்கு, பெருந்தெருக்கள், உயர்கல்வி ஆகிய அமைச்சுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கே கிடைக்க வேண்டும்.

இதன் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களது யோசனைக்கு இணங்க முடியாது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை நீக்குமாறே யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X