2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘வதியாத தூதுவர்கள் நியமிக்கப்படுவர்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வதிவிட தூதுவர்களுக்குப் பதிலாக வதியாத தூதுவர்கள், சில நாடுகளுக்கு நியமிக்கப்படுவர் என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுத் தெரிவித்தார்.

"வதியாத தூதுவர்கள், தமக்கான நாடுகளுக்கு தமது சொந்தச் செலவிலேயே பயணிப்பர். இதைச் செயற்படுத்துவதற்கு, அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது. இவ்வகையான நியமனங்கள், வெகு விரைவில் வழங்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு 1இல் உள்ள செலிங்கோ கட்டடத்தில், துணைத்தூதுவர் விவகாரப் பிரிவை மீளத்திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"வினைத்திறன் இல்லாத தூதரகங்களைத் மூடிவிடத் தயாராகவுள்ளோம். மேலும், தேவையான இடங்களில் நாம் புதிய தூதரகங்களைத் திறந்து வைப்போம். இவ்வாறு அமைக்கப்பட்டதுதான் எத்தியோப்பியத் தூதரகமாகும். எத்தியோப்பியாவில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் உள்ளது. எத்தியோப்பியா, ஆபிரிக்கக் கண்டத்தின் அரசியல் தலைநகராகும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இலங்கையர் அதிகம் உள்ள சைப்பிரஸில் நாம் உப தூதரகத்தைத் திறக்கவுள்ளோம். அத்துடன், மடகஸ்காரில் ஒரு துணைத் தூதரகத்தைத் திறக்கும்படி வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன" என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X