Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரதராஜன் யுகந்தினி
“எமது நாட்டு மக்களுக்கான உரிமைகள் என்ன? அவற்றினை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில், வினைத்திறனற்றவர்ளாகவே, அரசாங்க ஊழியர்கள் காணப்படுகிறனர். ஆதலால், தகவலுக்கான உரிமையை, மக்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் விழிப்புணர்வு ஒன்றினை ஏற்படுத்தப்போவதாக, தகவலுக்கான உரிமையை, உள்ளுர் மட்டத்தில் செயற்படுத்தும் சர்வோதய சிரமதான சங்கம் அறிவித்தது.
குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை, டிரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் சிறிலங்காவும் சர்வோதய சிரமதான சங்கமும் இணைந்து, கொழும்பு, மாத்தறை, திருக்கோணமலை, அநுராதபுரம், இரத்தினபுரி, வவுனியா போன்ற பகுதிகளில் மேற்கொள்ள ஆயத்தம் செய்துள்ளதாக, சர்வோதய சிரமதான சங்கத்தின் தகவல் அறியும் உரிமைக்கான முகாமையாளர் சங்கீதா குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் பொதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“நாங்கள் தகவல் சேகரிப்பதற்காக, ஊழியர் சேமலாப நிதியம், ஜனாதிபதி காரியாலயம், பிரதமர் காரியாலயம் போன்ற இடங்களுக்குச் சென்று, விண்ணப்பங்களைச் சேகரித்தோம். அதில், பெரும்பாலான அரச ஊழியர்கள், தகவலுக்கான உரிமை தொடர்பில், போதிய வினைத்திறன் அற்றவர்களாகவே காணப்படுகின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதனால், தற்போது 52 காரியாலயங்களிலிருந்து 52 தகவல் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அரச நிறுவனங்களில் சேவைபுரியும் அதிகாரிகள் பெரும்பாலோனர்களுக்கு, தகவலுக்கான உரிமைகள் தொடர்பிலான போதிய பயிற்சிகள், வழங்கப்பட்டில்லை.
இந்நிலையில், பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பில் தெளிவற்றவர்களாகவே காணப்படுகிறார்கள். இதனால், அவர்களுடைய தேவைகளை, சட்டரீதியாக எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில், பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, அதற்காகவே பஸ் ஒன்றினை தயார்படுத்தி உள்ளோம். அதன் வாயிலாக, இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்” என்றார்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago