2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

900 வீரர்கள் தேசப்பற்றாளர்களாக மார்ச் 1ஆம் திகதி பிரகடனம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்ட, 900க்கும் மேற்பட்டவர்கள், தேசப்பற்றாளர்களாகப் பிரகடனப்படுத்தும் உத்தியோகப்பூர்வ வைபவம், எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதியன்று இடம்பெறவிருகின்றது.

  1818ஆம் ஆண்டு ஆண்டு இடம்பெற்ற, ஊவா-வெல்லெஸ்ஸ எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்று, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டனர் என்றக்குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள், தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர். தேசப்பற்றாளர்களாகப் பிரகடனம் செய்யும் வைபவம், கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக இடம்பெறும். இந்த வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம அதிதியாகப் பங்கேற்பார்.  

தேசத்துரோகிகளாக குறிப்பிடப்பட்டு, சுமார் 199 வருடங்களின் பின்னர், தேசப்பற்றாளர்களாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல், அண்மையில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X