R.Maheshwary / 2021 மார்ச் 16 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான பெருந்தோட்டங்களை, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கே குத்தகைக்கு வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்த தொழில் அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா, அரசாங்கத்தின் தீர்மானங்களை அவர்கள் நகைப்புக்கு உள்ளாக்குவது கவலைக்குரிய செயற்பாடாகும் என்றார்.
தொழில் அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபையுடன் இணைந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, சில நிறுவனங்கள் மேற்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. இது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைத் தாமதப்படுத்தும் செயலாகும் என்றார்.
1இ000 ரூபாய்க்கான வர்த்தமானியை இரத்துச் செய்யக் கோரி, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த அவர், எனினும் தமது தரப்புக் காரணங்களை சட்டமா அதிபரிடம் முன்வைத்ததுடன், தமக்காக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.
தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயை வழங்குவதைத் தாமதப்படுத்துவதற்காகவே, பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன எனத் தெரிவித்த அவர், நீதிமன்றத்திலும் நாங்களே வெல்வோமென உறுதியளித்தார்.
2 minute ago
12 minute ago
17 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
17 minute ago
32 minute ago