2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

10 கி. கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஹெட்டிப்பொல வீதி கம்புராபொல பகுதியில், 10 கிலோ கிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபரொருவர் நேற்று இரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பெறுமதி 120 மில்லியன் ரூபாய்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது, 1 கிலோ கிராம் ஹெரொய்ன்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் வீட்டை சோதனைச் செய்த போது மேலதிக ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கம்புராபொல பகுதி​யைச் சேர்ந்த, 27 வயது​டைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .