S.Renuka / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டின் (2025) முதல் நான்கு மாதங்களில் இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மேற்கு மாகாணம் தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 46% டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், டெங்குவால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சமரவீர குறஙிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், ரத்னபுராவில் 985 பேர் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் 24 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் கொசுக்கள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
8 minute ago
15 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
21 minute ago
26 minute ago