2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டிக்கு மீற்றர் கட்டாயம்

Gavitha   / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டிகளுக்கு பணம் அறவிடுவதற்கான மீற்றர் கருவி பொருத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு வழங்குவதற்கான சலுகைகள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.  

மீற்றர் கருவிகளைப் பொருத்தும் போது, சிறந்த கட்டமைப்புகளைப் பொருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட
வுள்ளதாகவும் குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள், அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் மீற்றர் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் காலப்பகுதிக்குள் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகளைப் பொருத்தாத வாகன உரிமையாளர்களைக் கைது செய்வது தொடர்பில், பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு
ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .