2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொன்சேகா வழங்கி தகவல்களினடிப்படையில் கோட்டாவிடம் விரைவில் விசாரணை

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கோட்டாபய ராஜபகஷ, விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படுவார் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலை நடந்த போது, இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்தவாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரங்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையின் போது, சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்களினடிப்படையில், கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக, அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சரத் பொன்சேகாவின் சாட்சியங்களின் அடிப்படையில், படுகொலை நடந்த காலப்பகுதியில், கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் பலரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .