Gavitha / 2021 ஜனவரி 25 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டில், சுவசெரிய 1990 அம்பியூலன்ஸ் சேவை, 335,629 நோயாளர்களை, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளது என, சுவசெரிய சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி, சோஹன் டி அல்விஸ் தெரிவித்தார்.
இந்தச் சேவையின் கீ்ழ், நாடளாவிய ரீதியில் 297 அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், 1,400 ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான நோயாளர்கள், கொழும்பு மாவட்டத்திலேயே, இச்சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் இதற்குள், கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு இச்சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், 736,240 நோயாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளது.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago