Freelancer / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும்.
அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago