Editorial / 2020 ஜூலை 10 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது.
ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 253 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் என்பதுடன், மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த இருவர் மற்றும் கடற்படை வீரர் ஒருவர் ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 2350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது, 359பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .