Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 10 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு 6 மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்து இலங்கை திரும்பாமல், மேற்கு வங்கம், ஆந்திரா, டில்லி, கேரளா, தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
பொலிஸார் அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தியுள்ளனர். R
18 minute ago
33 minute ago
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
51 minute ago
55 minute ago