2025 மே 08, வியாழக்கிழமை

3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

Freelancer   / 2024 ஜூன் 09 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 

‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் பாரத் மாதா கி ஜி என்று பலத்த கோஷம் எழுப்பினர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X