2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

3 மீன்பிடிப் படகுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 மீனவப் படகுகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த 3 படகுகளையும் பழுதுப்பார்ப்பதற்காக இந்திய  பொறியியலாளர்கள் சிலர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர்.

குறித்தப் படகுகளை பழுதுப் பார்த்த பொறியியலாளர்கள் இந்தியா நோக்கி திரும்பியுள்ள நிலையில், படகுகள் மூன்றும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையில் இலங்கை கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான படகு ஒன்றும் இணைந்திருந்து.

இதற்கமைய, இந்தப் படகுகள் மூன்றும் இலங்கையின் வடக்கு திசையில் சர்வதேச கடற்பரப்பில் உள்ள இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு பிரிவின்  “ராணி துர்காவதி“ என்ற கப்பலிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .