Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 24 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஏ.ஜே. விஷாந்த, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு, மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .