2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

9 பாடங்களிலும் 9,413 பேருக்கு A சித்தி; முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூல மாணவர்கள் இல்லை

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தால், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.

இம்முறைப் பரீட்சையில், 9 ஆயிரத்து 413 பேர், ஒன்பது பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும், முதல் 10 இடங்களில், தமிழ் மொழிமூலம் தோற்றிய மாணவர்கள் இடம்பெறவில்லை.

பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி நிலக்னா வர்ஸவித்தான, அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

விசேடமாக, இரண்டாவது இடத்தை மூன்று பேர் பெற்றுள்ளனர். அதற்கமைய, விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதி, கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிஹிந்தி ரெபேக்கா ஆகியோர், இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

ஐந்தாவது இடத்தை, கேகாலை புனித ஜோசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார். ஆறாவது இடத்தை, ஐந்து பேர் பெற்றுள்ளனர். அதற்கமைய, கொழும்பு தேவி பாலிகா, கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் இருவர், காலி மஹிந்த கல்லூரி, ஹொரண தக்சிலா கல்லூரி மாணவ, மாணவியர், ஆறாவது இடத்தை பெற்றுள்ளனர்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெற்ற இந்தப் பரீட்சையில், 6 இலட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 5 இலட்சத்து 18 ஆயிரத்து 184 பேர், பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இதில் 71.66 சதவீதமானோர், கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .