Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் அது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, இலங்கை மத்திய வங்கியிடம் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) விரிவான விளக்கங்களைக் கோரியுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மத்திய வங்கி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்ற சட்டரீதியான ஏற்பாட்டிற்கு அமைய இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க, ஆளும் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி விவகாரத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. குறித்த மோசடி தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குழுவிடம் தெரிவித்தார்.
தேவையான அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டவுடன், இது தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாகக் குழுவிடம் சமர்ப்பிப்பதாக அவர் உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட வங்கியில் நிறுவன ஆளுகை சார்ந்த குறைபாடுகள் காணப்படுவதையும், மத்திய வங்கியின் மேற்பார்வைத் துறைகளின் கண்காணிப்பில் உள்ள பலவீனங்களையும் குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், முக்கியத் தகவல்களை அறிக்கையிடுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் குழு தனது அதிருப்தியை வெளியிட்டது.
இத்தகைய குறைபாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனச் சுட்டிக்காட்டிய அரசாங்க நிதி பற்றிய குழு, இவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியது. நிதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இவ்விவகாரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பதாகக் குழு வலியுறுத்தியது.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago