2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

O/L விஞ்ஞானத்துக்கு 2 புள்ளிகள் இலவசம்

Editorial   / 2024 மே 15 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்துமுடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான  வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.

விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கே இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

  கல்விப் பொதுத் தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X