2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

STF இன் கட்டளையிடும் அதிகாரி லத்தீப் நாளையுடன் ஓய்வு

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் நாளையுடன் ஓய்வுப் பெறுகிறார்.

இன்றுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், நாளைய தினம் லத்தீப் ஓய்வு பெறவுள்ளார்.

41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  அண்மையில் தெஹிவளை மற்றும் பேருவளைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ​ஹெரோய்ன் கைப்பற்றல் விடயமும் லத்தீப்பின் தமைமையின் கீழேயே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .