2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

வடிசாராயப் போத்தல்கள் வைத்திருந்தவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, நீலப்பனிச்சம் குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 20 வடிசாராயப் போத்தல்களை வைத்திருந்த நபருக்கு, 54,000 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் அத்தொகையியைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தும், குச்சவெளி நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (19) தீர்ப்பளித்துள்ளது.    
                        
திரியாய் ஐந்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநாயகம் வயது (48) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.            

சந்தேகநபருக்கெதிராக உப்புவெளி பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கில் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட, குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே மேற்படி தீர்ப்பளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X