2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சாரல் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இராமகிருஷ்ண  சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை  சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சங்கத்தின் செய்திமடலான  சாரல் 2 வெளியிட்டு வைக்கப்பட்டது. சங்கத்தின் தலைவரும் கல்லூரியின் அதிபருமான இ.புவனேந்திரன் இதன் முதல் பிரதியை முன்னாள் அதிபர் மா.இராசரெத்தினத்திடம் வழங்கினார்.

செயலாளர் பொறியியலாளர் தி.ஹரிகரன் மற்றொரு பிரதியை கிழக்கு மாகாண கல்வி பண்பாடு போக்குவரத்து காணி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணிக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் க.ஞானசெல்வத்திற்கும் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .