2025 மே 19, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதூர்தீன் சியானா, எம்.முபாரக்

தம்பலாகாமம், தி/அஷ் ஷம்ஸ் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பு  செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, தி/அஷ் ஷம்ஸ் வித்தியாலயத்தின் அதிபர் ஆ.எஹியா தலைமையில், வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில், 02 மில்லியன் ரூபாய் செலவிலேயே இவ்விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாகாணசபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர், முன்னால் தம்பலகாம பிரதேச  சபை தவிசாளர் முஹமட் அலி , தம்பலகம பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர் நசீர்கான், பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஏனைய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X