2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு

தீஷான் அஹமட்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் நகரப்பகுதியில் உள்ள பாலநகர் கிராமத்தில், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகசபைத் தலைவரின் ஏற்பாட்டில், இந்து அறநெறி பாடசாலை, நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ இ. பாஸ்கரன் குருக்கள் தலைமையில், இந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலநகர் கிராமம், நூற்றுக்கும் மேற்பட்ட இந்துமதத் தமிழ் குடும்பங்கள் வாழ்ந்த கிராமமாகும். யுத்த காலத்தில் பல இழப்புகளைச் சந்தித்து, தற்போது 19 குடும்பங்களே இங்கு வாழ்ந்து வருகின்றன.

இவர்களே, இங்குள்ள மூத்துமாரியம்மன் ஆலயத்தையும் பராமரித்து வருகின்றனர். இம்மக்கள் வாழ்வாதாரம், குடியிருப்புக்காணி, பிள்ளைகளின் கல்வி விடயங்களில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து குருமார் சங்கத்தால், சுமார் 12 மாணவர்களுடன் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முத்துமாரியம்மன் நிர்வாக சபையினர், கொட்டியாபுரபற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தின் கொள்கை பரப்புச் செயலளாரும் ஓய்வுபெற்ற அதிபருமான க.வல்லிபுரம் உட்பட மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X