Suganthini Ratnam / 2016 ஜனவரி 26 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்களில் அரசியல் தலையீடுகள் ஒருபோதும் இருக்கக் கூடாதென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பதில் முதலமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலையிலுள்ள மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி சமர்ப்பித்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பதில் முதலமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் குறிப்பாக, நியமனத் திகதியிலிருந்து ஐந்து வருடங்கள் கடமையாற்ற வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ் நியமிக்கப்படுகின்றனர்.
ஆனால், புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களில் சிலர் இந்த நிபந்தனையை பின்பற்றாது, குறிப்பிட்ட சில காலம் மாத்திரம்; கடமையாற்றிவிட்டு, அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி அவர்களின் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறான செயற்பாடு கடந்த ஆட்சிக்காலத்தின்போதே அதிகரித்துக் காணப்பட்டது.
2011ஆம் 2012ஆம் 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்; கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்' என்றனர்.
'இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமநிலை பேணப்படாமல், சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டு வருகின்றது. எனவே, ஆசிரியர்களின் விடயத்தில் எந்த அரசியல் தலையீடுகளும் இடம்பெறாமல் இருக்கவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
8 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
1 hours ago