2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இடமாற்றத்தை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஜூலை 04 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் அரச ஊழியர்களின் 2019ஆம் ஆண்டுக்கான வாடாந்த இடமாற்றத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டப்ளியூ திஸாநாயக்க, சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  வருடாந்த இடமாற்றத்துக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை (111/11/1/அதி சிறப்பு ), மொழிபெயர்ப்புச் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்யோகத்தர் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை ஆகியவற்றுக்கு உட்படுகின்ற உத்தியோகத்தர்கள் இந்த இடமாற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது சேவை நிலையத்தில் தொடர்ச்சியாக 2 வருடங்கள் சேவையாற்றியிருத்தல் இடமாற்றத்தைக் கோரி விண்ணப்பிப்பதற்கு தகுதியானவர்களாவர்.

ஒரே சேவை நிலையத்தில் அல்லது ஒரே அமைச்சில் அல்லது அதனோடிணைந்த திணைக்களம் மற்றும் நிறுவனங்களில் அல்லது ஒரே திணைக்களத்தில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்கள் இடமாற்றத்துக்கு உள்வாங்கப்படுவர்.

2018 ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாளாகும்.

2018 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இடமாற்ற தீர்மானங்களை அறிவிக்கும் நாளாகும்.  

2018 செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி இடமாற்ற மேன்முறையீடுகளை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாளாகும்.

2018 நவம்பர் மாதம் 01 ஆம் திகதி மேன் முறையீடு தொடர்பான தீர்மானங்கள் அறிவிக்கும் நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X