Princiya Dixci / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - தம்பலகாமம், சிராஜ் நகர் பகுதியில் உள்ள கிரோமதய மருத்துவ மாது கிளினிக் நிலையம், இனந்தெரியாதோரால் நேற்று (10) இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சை நிலையத்தின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சில சுகாதாரப் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது சுகாதார பரிசோதகரின் அலுவலகக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் சென்று பார்வையிட்டுள்ளார் என்பதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago