Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலேயே ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை இலவசக் கல்விகாக அதிகளவில் நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றைய நாடுகளில் ஆரம்ப கல்வியைக் கற்பதற்கு மாத்திரமே அரசு நிதியுதவி செய்து வருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ், கந்தளாய் வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட ஜயந்திபுர வித்தியாலயத்தில், 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை, கிழக்கு மாகாண ஆளுநர், இன்று (09) திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், சிறார்களின் நலனுக்காகவே சிறார்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் தமது ஒவ்வொரு வேலைத்திட்டங்களையும் கல்வியின் பக்கம் ஏற்படுத்தி வந்தமையைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்துக்கென 5,535 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றையதினம் கிழக்கு மாகாணத்தில் 84 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதாகவும், கல்வியமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago