Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் தென்கொரிய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் லீ கியோனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கிழக்கு ஆளுநரின் கொழும்பு வாசஸ்தலத்தில் வைத்து, நேற்று (12) இடம்பெற்றதென, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகள், கடல்வள அபிவிருத்திகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்காலத்தில் தென்கொரிய நாட்டின் நிதியுதவியுடன் இவ் இரண்டு துறைகளும் பல அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளமை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகவும் ஆளுநரின் ஊடகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .